தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் குன்னூர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்று திரும்பிய போது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்தது. அப்போது அந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் கடையம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர்களது வீட்டிற்கு நேரில் சென்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலா 10,000ரூபாய் வீதம் 80,000ரூபாய் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், மாவட்டத் துணைச் செயலாளர், தமிழ்ச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் ரம்யா ராம்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், கிளைச் செயலாளர் துரைராஜ், சசிகுமார், அர்ச்சுனன் சுரேஷ், மோகன், ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.