Home செய்திகள் நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி பேரணையில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்! உயிர் பலிகள் ஏற்படும் முன் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி பேரணையில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்! உயிர் பலிகள் ஏற்படும் முன் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

by Askar

நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி பேரணையில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்! உயிர் பலிகள் ஏற்படும் முன் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பேரணை வழியாக மதுரைக்கு செல்கிறது. இதனால் நிலக்கோட்டை வட்டார பொதுப்பணித்துறையினர் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் பேரணையில், ஆற்றில், குளிக்கவோ இறங்கவோ தடை விதிக்கப்பட்ட நிலையில் வெளியூரிலிருந்து இங்கே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர்.

இதனால் வரும் பேராபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆழமான பகுதிகளில் குளித்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் குளித்த ராணுவ வீரர்கள் 3 பேர் குளிக்கும் போது சுனையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் வருடா வருடம் வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடும் போது தினந்தோறும் விளாம்பட்டி காவல்துறையினர் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஆனால் கடந்த 2 வருடமாக காவல்துறையினர் ஆற்றுப்பகுதிக்கு வருவது இல்லை. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com