Home செய்திகள் நெல்லையில் அருங்காட்சியக நாள் கொண்டாட்டம்; நினைவு பரிசுகள் வழங்கல்..

நெல்லையில் அருங்காட்சியக நாள் கொண்டாட்டம்; நினைவு பரிசுகள் வழங்கல்..

by Abubakker Sithik

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பன்னாட்டு அருங்காட்சியக நாள் கொண்டாட்டம்; நினைவு பரிசுகள் வழங்கல்..

மே 18ஆம் தேதி பன்னாட்டு அருங்காட்சியக நாளாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதல் நிகழ்வாக சிவராம் கலைக் கூடத்தை சார்ந்த இருபது மாணவர்கள் 20 சுதந்திர போராட்ட வீரர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களை வரைந்து அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர். இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். திருநெல்வேலி மாநகராட்சி காவல் ஆணையர் முனைவர் மூர்த்தி கலந்து கொண்டு நிகழ்விற்கு தலைமை வகித்து மாணவர்களை வாழ்த்தி பேசினார். ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு அருங்காட்சியகம் சார்பில் சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்வில், எழுத்தாளர் நாறும்பு நாதன், ஓவிய ஆசிரியர். சொக்கலிங்கம், லயன் திருமலை முருகன், கலை பதிப்பகத்தின் ஆசிரியர் பாப்பாகுடி செல்வமணி, புன்னைச்செழியன், கவிஞர் சுப்பையா, கலையாசிரியை ரகுமத்நிசா பேகம், அன்னை தெரேசா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதைப் பாராட்டி அருங்காட்சியகம் சார்பில் சிறந்த கலையாசிரியர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து சாராள் தக்கர் கல்லூரியின் முதுகலை தமிழ் மாணவிகள் மேற்கொண்ட அருங்காட்சியக உள்விளக்க பயிற்சியின் ஒரு பகுதியாக என்னை கவர்ந்த நெல்லை அரசு அருங்காட்சியகம் என்கிற தலைப்பில் போஸ்டர் தயாரித்து அதைப்பற்றி விளக்கங்களும் அளித்தனர். தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியகமும் நானும் என்கிற தலைப்பில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும், அருங்காட்சியகத்தின் மூலமாக தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டது பற்றியும் பேசினர். கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து அருங்காட்சியக தின சிறப்பு கண்காட்சியாக தமிழக நடுகற்கள் என்கிற புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கண்காட்சியில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஏராளமாக நடுகற்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இக்கண்காட்சியை சவேரியார் கல்லூரியின் முதுகலை தமிழ் மாணவ மாணவிகள் வந்திருந்த பார்வையாளர்களுக்கு விளக்கங்களை அளித்தனர். தொடர்ந்து எனது அரும்பொருள் என்கிற தலைப்பில் பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள தங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய அரும்பொருள்களை காட்சிப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களையும் காட்சிப்படுத்தினர். அவர்களுக்கு அருங்காட்சியகம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com