திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர் செங்கம் பகுதியில் அதிக அளவில் நெல் மணிலா கரும்பு உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருவது வழக்கமாகும்ஆனால் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் நெல் மணிலா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்த நிலையில் மாற்று பயிராக பூக்களை தேர்வு செய்து தற்போது நல்ல மகசூல் பெற்று பயனடைந்து வந்தனர்இந்நிலையில் கடந்த சில நாட்களாக செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்ததால் செங்கம் அடுத்த கொட்டகுலம் சுண்டக்காப்பாளையம் கோனாங்குட்டை கேட் கண்ணகுருக்கை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் செண்டுமல்லி மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்சுண்டக்காபாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பூக்கள் செடிகளை நடவு செய்து அதனை பராமரித்து வந்த நிலையில் தற்போது அதிக அளவில் பூக்கள் பூத்து நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில் சரியான விலை கிடைக்காததால் பூக்கள் பூந்தோட்டத்தில் பூத்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்இந்நிலையில் விளைச்சல் பெற்றுள்ள பூக்களை கூலியாட்கள் வைத்து அதனை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் விலை கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்
40
You must be logged in to post a comment.