அரசுப்பள்ளி மாணவர் பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம்.

ராமநாதபுரம் சேவை மற்றும் அர்ப்பணிப்பு இயக்கம் நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் இ.முகமது ஆதில் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் முகமது அஸ்ஃபக் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.இதில் மாணவர் இ.முகமது ஆதில் சிறப்பாக பேசி இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளார். மாணவருக்கு பரிசாக வெற்றி கேடயமும், சான்றிதழும், மற்றும் பரிசுத் தொகை ரூபாய் 750 வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இப்பேச்சுப் போட்டியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 127 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் பல்வேறு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல பரிசுகள் பெற்று ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் நம்பிக்கை நட்சத்திரம் என்ற விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரிய – ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோரும் வாழ்த்தினர்….