இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.  அந்த விழாவில் சங்க தலைவராக வழக்கறிஞர் செந்தில் குமார் , செயலராக டாக்டர் தாரைச்செல்வன் பதவியேற்றனர். இவ்விழாவுல் ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு பி.என்.பி.முருகதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேலும் இவ்விழாவில்  முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா புதி உறுப்பினர்களை இணைத்தார். துணை ஆளுநர் பார்த்தசாரதி சுகுமார் பட்டய தலைவர் வி.என் நாகேஸ்வன், முன்னாள் தலைவர் ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதைத் தொடர்ந்து உச்சிப்புளி அரசு மேல்நிலை பள்ளியில் 2017-18 கல்வி ஆண்டில் எஸ் எஸ் எல் சி , பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கீழநாகாச்சி ஊராட்சி மன்றத் தலைவர் உ.ராமச்சந்தின் ஊக்கத் தொகை வழங்கினார்.

மண்டபம் ஒன்றியம் வேதாளை சிங்கிவலைக்குப்பம் அரசு துவக்கப் பள்ளிக்கு மேஜை,  நாற்காலிகளை உச்சிப்புளி அரசு மேல்நிலை பள்ளிக்கு மின் விசிறிகள், ஆதரவற்றோர் இல்லத்திற்கு அரிசி மூடைகளை உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளி தாளாளர் இக்பால், முதல்வர் ரேணுகாதேவி ஆகியோர் வழங்கினர்.  ஏழை பெண்கள் இரண்டு பேருக்கு தையல் இந்திரங்களை இராமநாதபுரம் நவசக்தி அறக்கட்டளை சார்பில் பி.ஆர்.என்.இராஜாராம் பாண்டியன் வழங்கினார்.

நலிவுற்ற தொழிலாளிக்கு இஸ்திரி பெட்டியை ஹெச்.டி.எப்.சி.வங்கி இராமநாதபுரம் கிளை மேலாளர் அசோக் குமார் வழங்கினார். விழாவில் பங்கேற்றோர் அனைவருக்கும் தலைவர் செந்தில் குமார் சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது. உச்சிப்புளி சாலை ஓர வியாபாரிகள் சங்கத்திற்கு துணிப்பைகளை ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் சார்பில் பட்டய தலைவர் தினேஷ் பாபு வழங்கினார்.

இராமநாதபும், கோல்டன், கோரல் சிட்டி, ஈஸ்ட் கோஸ்ட், இராமேஸ்வரம்,கீழக்கரை, பரமக்குடி சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர், வர்த்தக சங்கம், ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயலாளர் தாமரை செல்வன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை இத்ரிஸ் முகமது தொகுத்து வழங்கினார்.