Home செய்திகள் நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்..

நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்..

by ஆசிரியர்

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மகேந்திரகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் 31.08.2023 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை போக்குவரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்தினார்கள். இரு சக்கர வாகன பேரணி மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இச்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மகேந்திரகுமார் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையேற்றார். இப்பேரணியானது குலவணிகபுரம், ரிலையன்ஸ் பங்க் வழியாக என்.ஜி.ஓ காலனி வந்தடைந்தது.

தொடர்ந்து, அருகிலுள்ள சுந்தரி மஹாலில் ஓட்டுனர்கள், பயிற்றுனர்கள் மற்றும் வாகன விற்பனையாளர் ஆகியோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், சாலை விதிகளை கடைபிடிப்பது, இருசக்கர வாகன விபத்துக்களில் இறப்புக்கு 80 சதவீதம் காரணம் தலைக்கவசம் அணியாமல் இருப்பதே ஆகும். எனவே, இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க கூடாது. இந்திய தர நிர்ணய சான்று (ஐ.எஸ்ஐ 4151) அல்லாத சாதாரண தலைக் கவசங்களை பயன்படுத்த கூடாது. தலைக் கவசத்தின் முழுப்பயனையும் பெற எப்போதும் கழுத்துப் பட்டையை (Chinstrap) அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது, புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பாதுகாப்பு கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், உதவி இயக்குநர் சசிகலா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சரவணன், தொழில் நுட்பம் பொது மேலாளர்கள் சந்திர நாராயணன், கண்ணன், மோட்டார் ஆய்வாளர்கள் பிரபாகரன், ராஜசேகரன், பெருமாள், மாவட்ட ஓட்டுனர் சங்கத்தலைவர் காளிதாஸ், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் செல்வன், லெட்சுமணன் உட்பட அரசு அலுவலர்கள் போக்குவரத்துறை அலுவலர்கள், ஓட்டுனர்கள், பயிற்றுநர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!