Home செய்திகள் ராமநாதபுரத்தில்  வாக்குச்சாவடி சீரமைப்பு பணி: ஆட்சியர் ஆலோசனை..

ராமநாதபுரத்தில்  வாக்குச்சாவடி சீரமைப்பு பணி: ஆட்சியர் ஆலோசனை..

by ஆசிரியர்

ராமநாதபுரம், செப்.1- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி  ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணி ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.

கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் 5,75,546, பெண் 5,81,268 ராணுவத்தில் பணிபுரிவோர் 1,696,  மற்றவர் 68 என 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர். கிராமப் பகுதிகளில் 293, நகர் பகுதியில் 1078 வாக்குப்பதிவு மையங்கள் என 1,371 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம்-83, 305 முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாகம் – 307 ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலிருந்து தலா 1 வாக்குச்சாவடி மையம் கூடுதலாக 3 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. தற்போது 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 17 வாக்குச்சாவடி மையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் வரப்பெற்றது. 3 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் குறித்து மனு அளித்துள்ளனர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களின் நிலை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் களஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் தேவையான கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கவேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, தேர்தல் வட்டாட்சியர் செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!