Home செய்திகள் செவ்வாய் கிரகம் பயணிக்கும் விண்கலத்தில் இடம் பிடித்த உப்பூர் மாணவர்கள்

செவ்வாய் கிரகம் பயணிக்கும் விண்கலத்தில் இடம் பிடித்த உப்பூர் மாணவர்கள்

by mohan

அமெரிக்க விண்வெளி மையம் (நாசா) சார்பில் மார்ஸ் 2020 ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு 2020 ஜூலையில் அனுப்புகிறது. செவ்வாய் கிரகத்தில் 2021 பிப்ரவரியில்,தரை இறங்குகிறது. இந்த விண்கலத்தில் தங்கள் பெயரை பொறிக்கும் வாய்ப்பை நாசா வழங்கியது. உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பெயர் பதிவு செய்துள்ளனர். இதில் திருவாடானை திருவெற்றியூர் நார்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர்,நிலநவ சிகன் 13, ஏழாம் வகுப்பு மாணவர் திகர் பூவன் 11 ஆகியோர் ரோவர் விண்கலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்தனர். இவர்கள் உப்பூர் அருகே கூத்தன் வயல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன்களாவர். வழக்கறிஞர் உதவியாளராக பணியாற்றும் பாலமுருகனும் தனது பெயரை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!