Home செய்திகள் திருப்புல்லாணி அருகே நெல்லின் ரகம் பற்றிய விழிப்புணர்வு !

திருப்புல்லாணி அருகே நெல்லின் ரகம் பற்றிய விழிப்புணர்வு !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளமோர்க்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வறட்சி மற்றும் உப்புத்தன்மையை தாங்கும் நெல்லின் இரகங்கள் குறித்து கிராமப்புற வேளாண்மை பணி அனுபவதிட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி பா. சிந்துபிரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். பொதுவாகவே இம் மாவட்ட மண் வகைகள் நைட்ரஜன் சத்து குறைவானதாகவே காணப்படுகின்றன. மேலும் திருப்புல்லாணி, கமுதி மற்றும் கடலாடி வட்டாரங்களில் நடுத்தரத்திலும் இதர வட்டாரங்களில் குறைவாகவும் மண் வகைளில் பாஸ்பரஸ் சத்து உள்ளது. இம் மாவட்ட மண்ணில் ஜிப்சம் , சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன எனவே விவசாயிகளுக்கு பரமக்குடி (Pkm)1 மற்றும் திருச்சி 5 ( TRY) என்கின்ற நெல்லின் ரகங்களை பயன்படுத்துவதன் மூலம் வறட்சியைத் தாங்கவும் , வறண்ட நிலையில் உப்புத்தன்மைமை தாங்கி மகசூல் அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றனர். இதில் ஏராளமான கிராமப்புற விவசாயிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!