Home செய்திகள் பிரப்பண்வலைசை கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி !

பிரப்பண்வலைசை கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரப்பண்வலைசை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்களுக்கு திரவ உயிர் உரம் பயன்படுத்துவன் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகளை பற்றி மதுரை வேளாண் கல்லூரி மாணவி அ. ஆஷிகா விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கினார். மேலும் மாணவி கூறுகையில் மெத்திலோ பாக்டீரியம் (Methylobacterium) மூலம் இயற்கை முறைகள் சத்துக்களைச் சேர்த்து, வளர்ச்சி ஊக்குவிக்கும் பொருட்களை உருவாக்கி அதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகிறது.இதனால் இரசாயன உரங்கள் பயன்பாட்டை உயிர் உரங்கள் குறைகிறது மேலும் உயிர் உரங்களிலுள்ள நுண்ணுயிர்கள் மண்ணிற்கு இயற்கை ஊட்டச்சத்து சுழற்சியை மீட்டு மண்ணின் கரிமபொருட்களை அதிகரிக்கிறது.இதன் மூலம் உயிர் உரங்கள் , செடிகள் ஆரோக்கியமாக வளரும், அதே சமயம் மண் சுகாதாரம் அதிகரிக்கும். இது போன்ற நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு தகுந்த அறிவியல் பெயர் தாவர வேர் வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும். எனவே, அவை மண் வளத்தை அதிகரித்து கரிம சத்து அளிப்பதன் மூலம் தாவர ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்ற மிகவும் சாதகமானதாக அமைகிறது . இதனால் மண்வளம் அதிகரித்து இயற்கை வாழ்விடத்தை பராமரித்து பயிர் விளைவை 20-30%மாக அதிகரிக்கும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் கிராமப்புற விவசாயிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!