Home செய்திகள் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால்… பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால்… பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

by Askar

பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால்… பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் இன்று 22.05.2024 மதிய நிலவரப்படி94.50 அடியை எட்டி உள்ளது இதனால் கடந்த 90 நாட்களுக்கு பிறகு மாலை 6:00 மணிக்கு பில்லூர் அணையில் இருந்து 3000 கன அடி நீர் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் மொத்த நீர்மட்டம் 94.50 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் 3000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 3000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

பவானி ஆற்று கரையோரப் பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை,வெண்ணல்நாயுடு வீதி, ஒடந்துறை இந்திரா நகர், குஞ்சவண்ணான் தெரு, சீரங்க ராயன் ஓடை,வெள்ளிப்பாளையம், உள்ளிட்ட ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில் வட்டாட்சியர் நகராட்சி ஆணையாளர் காவல்துறையினர் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அரசு நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் தகவல்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!