Home செய்திகள் பாம்பன் பாலம்- மண்டபம் கடற்கரை பூங்கா அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்

பாம்பன் பாலம்- மண்டபம் கடற்கரை பூங்கா அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்

by mohan

சென்னை எண்ணூர் அருகே காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் பகுதியைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 19 பேர் வாடகை வேனில் ஆன்மிக சுற்றுலா கிளம்பினர். டிரைவர் பட்சி வேனை ஓட்டினர். அவருக்கு உதவியாளர் உடன் வந்தார்.  மதியம் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு இரவு 9 மணியளவில் இராமேஸ்வரம் புறப்பட்டனர். இன்று6.10.19 அதிகாலை 2 மணி அளவில் பாம்பன் பாலம் அருகே மண்டபம் கடற்கரை பூங்கா பகுதியை வேன் கடந்த போது, மழை பெய்து கொண்டிருந்தது. வாகனத்தின் வேகத்தை குறைக்க டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது நிலைதடுமாறிய வேன் பள்ளத்தில் உருண்டது. இதில்,பவானி 57, கற்பகம் 57லட்சுமி 49,புனிதவள்ளி 43, கிஜோய் 21, நித்யா 22, ராபின் 23, சிந்து 16, சரண் 36 உள்பட 13 பேர் காயமடைந்தனர். இவர்களில் மீனாட்சி 59, கவிதா 50,ஷாலினி 33 ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ஆம்புலன்ஸ், அவசர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் அறிவுறுத்தல் படி ராமேஸ்வரம், உச்சிப்புளி பகுதிகளைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் குருசாமி, அழகுலிங்கம், ஓட்டுநர்கள் அரவிந்த், ரவிச்சந்திரன் ஆகியோர் முதலுதவி உபகரணங்களுடன் சம்பவ இடம் வந்தனர். மண்டபம் போலீசார், தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் காயமடைந்தோரை மீட்டனர். மீட்கப்பட்ட 13 பேர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து மண்டபம் போலீஸ் சார்பு ஆய்வாளர் சிராஜூதீன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!