Home செய்திகள் இன்று முதல் ஆரம்பம் அக்னி நட்சத்திரம்! கொளுத்த போகும் வெயிலும், “கீழை நியூஸ்” வழங்கும் ஆலோசனைகளும்..

இன்று முதல் ஆரம்பம் அக்னி நட்சத்திரம்! கொளுத்த போகும் வெயிலும், “கீழை நியூஸ்” வழங்கும் ஆலோசனைகளும்..

by ஆசிரியர்

மிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த கத்தரி வெயில் வருகிற 28-ம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது.பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று முன்தினம் 110 டிகிரி வெயில் கொளுத்தியது. கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டியில் இதுவரை இல்லாத வெப்ப அளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குளிருக்கேற்றாற்போல் உடையணிந்து செல்லும் நிலை அங்கு மாறி, வெயிலுக்கு குடைப்பிடித்தபடி மக்கள் செல்லும் காட்சியை கடந்த சில நாட்களாக பார்க்க முடிகிறது. இது ஒருபுறம் இருக்க வெயில் காலங்களில், கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்கும்.

ஆனால் இந்த ஆண்டு கோடை மழை என்பது அரிதான விஷயமாகவே இருக்கிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மட்டும் லேசான கோடை மழை தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

இதே நிலை நீடித்தால், கத்தரி வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட மேலும் அதிகரித்து காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக, கடந்த ஆண்டில் கத்தரி வெயில் காலத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரியை தொட்டதுதான் அதிகபட்ச வெயிலாக பதிவாகி இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஈரோட்டில் 109 டிகிரியை கடந்து விட்டது. அந்தவகையில் பார்க்கும் போது, இந்த ஆண்டு 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு மே மாதத்தில் 119.48 டிகிரி பாரன்ஹீட் பதிவானதுதான் இதுவரை பதிவான உச்சபட்ச வெயில் அளவாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி நட்சத்திரமும், ஆலோசனைகளும்;

இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்குகிறது. ஒரு மாதம் நீடிக்கும் இந்த வெயிலின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இக்காலத்தில் கவனமாக இருக்கவும்.

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும்.

ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர். இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர் பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும். மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம்.

வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு.

உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!