Home செய்திகள் சாயல்குடியில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

சாயல்குடியில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் கீழ் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. கடலாடி ஊராட்சிய ஒன்றிய முன்னாள் தலைவர் வீ.மூக்கையா தலைமை வகித்தார். கடலாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வெ.தேன்மொழி முன்னிலை வகித்தார். போஷான் அபியான் திட்டத்தின் வட்டார திட்ட உதவியாளர் மு.வெள்ளைப்பாண்டியன் வரவேற்றார்,கடலாடி ஒன்றிய பாஜ., தலைவர் கோபாலகிருஷ்ணன், சாயல்குடி நகர் தலைவர் சத்தியமூர்த்தி , முன்னாள் கவுன்சிலர் முத்துபாண்டி (அதிமுக), மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பச்சமால், சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை செவிலியர் கலாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஊட்டச்சத்து அவசியம், குழந்தை பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. போஷான் அபியான் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ரா.மைதிலி, மேற்பார்வையாளர்கள் உமா, சரசு பண்ணரசி ரமணி, அமுதா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!