Home செய்திகள் வெங்கடாம்பட்டி குழந்தைகள் இல்லம் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்; கருத்து கேட்பு .. கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்..

வெங்கடாம்பட்டி குழந்தைகள் இல்லம் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்; கருத்து கேட்பு .. கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, வெங்காடம்பட்டி குழந்தைகள் இல்ல வளாகத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி இல்லத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால சேவைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. கருத்துக்கேட்பு கூட்டத்தில், மீண்டும் வெங்கடாம்பட்டி குழந்தைகள் இல்லம் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள், பெண்கள், முன்னாள் குழந்தைகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்திற்கு கீழப்புலியூர் நல்லாசிரியர் ரொட்டேரியன் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். நன்னன், பியூலா, தமிழ்ச்செல்வி, சுரேஷ் ஆகியோர் வரவேற்றனர். வி. எஸ். மணியன், இசக்கியப்பன், சுரண்டை பரமசிவன் டெய்லர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் துணைவியார் சித்ரா, தங்கராசு, மாரியப்பன், ஆறுமுகம், கருப்பசாமி, ஆலங்குளம் நண்பர்கள் குழு, பிரான்சேரி கதிரவன், டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்திலிருந்து 18 வயது நிரம்பிய பின் கல்லூரி படிப்பை முடித்த தங்க கார்த்திக், பானு கோமதிநாயகம், சாம்பவர் வடகரை புஷ்பலதா ஆகியோர் பேசினார்கள். அதில் என்றென்றும் குழந்தைகளுக்கு உதவும் விதமாக வெங்கடாம்பட்டி குழந்தைகள் இல்லம் செயல்பட வேண்டும் என்று அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். பிறந்து ஆறு மணி நேரத்தில் தகாத உறவால் பிறந்த குழந்தையை டிரஸ்ட் தொட்டிலில் விட்டுச் சென்றதை பொறுப்பாய் குழந்தை நலக்குழு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் ஆகியவைகளுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தவர் வெங்கடாம்பட்டி பூ. திருமாறன் என பொதுமக்கள் பாராட்டினர். முக்கிய தீர்மானங்களை மாரிச் செல்வம், காளியம்மாள், முத்து செல்வி நிறைவேற்றினர். நிறைவாக தம்மீது பொதுமக்கள், குழந்தைகளுக்கு உதவியவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது என பேசிய காப்பகத்தின் நிறுவனர் பூ. திருமாறன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com