Home செய்திகள்உலக செய்திகள் வெப்பக் கதிர் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் லாங்லி பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22, 1834).

வெப்பக் கதிர் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் லாங்லி பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22, 1834).

by ஆசிரியர்

சாமுவேல் பியேர்பாயிண்ட் லாங்லி (Samuel Pierpont Langley)  ஆகஸ்ட் 22, 1834ல் பாஸ்டனில் உள்ள ராக்ஸ்பரியில் பிறந்தார். போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார். இவர் ஆர்வார்டு வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த பிறகு, கணிதவியல் பேராசிரியராக அமெரிக்க நாவாயியல் கல்விக்கழகத்தில் சென்று சேர்ந்தார். உண்மையில் அங்கு அந்தக் கல்விக்கழகத்தின் சிறிய வான்காணகத்தை மீட்டு இயக்கச் சென்றார். இவர் 1867இல் அல்லெகேனி வான்காணகத்தின் இயக்குநரானார். மேலும் பென்னிசில்வேனியா மேற்குப் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியராகவும் விளங்கினார். மேலும் இவர் வானூர்தியியல் வல்லுனரும் ஆவார். இவர் 1887ல் சுமித்சோனிய நிறுவனத்தின் மூன்றாம் செயலராகச் சேர்ந்தாலும், இப்பதவியில் 1891 வரை தொடர்ந்து இருந்தார். இவர்தான் சுமித்சோனிய வானியற்பியல் வான்காணகத்தை நிறுவியவர் ஆவார்.

1880 ஆம் ஆண்டில் லாங்லி போலோமீட்டரைக் கண்டுபிடித்தார். இது ஆரம்பத்தில் அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிட பயன்படுகி.றது. போலோமீட்டர் விஞ்ஞானிகளுக்கு ஒரு டிகிரி செல்சியஸின் 1 / 100,000 க்கும் குறைவான வெப்பநிலையின் மாற்றத்தைக் கண்டறிய உதவியது. இது பூமியில் சூரிய சக்தியின் அளவை அளவிடுவதற்கான அடித்தளத்தை அமைத்தது. அவர் அதில் 1881 ஆம் ஆண்டு “தி போலோமீட்டர் மற்றும் கதிரியக்க ஆற்றல்” என்ற கட்டுரையை வெளியிட்டார். சந்திரனின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிடுவதற்கான முதல் முயற்சிகளில் ஒன்றை அவர் மேற்கொண்டார். பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மூலம் அகச்சிவப்பு கதிர்வீச்சின் குறுக்கீட்டை அவர் அளவிடுவது 1896 ஆம் ஆண்டில் ஸ்வாண்டே அர்ஹீனியஸால் பயன்படுத்தப்பட்டது. கார்பன் டை ஆக்சைடு அளவை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்குகிறது.

வெப்பக் கதிர் அளவி (போலோமீட்டர்) (bolometer) என்பது தன் மீது விழும் மின்காந்தக் கதிர்வீச்சின் திறனை, அது பொருட்களின் மீது உண்டாக்கும் வெப்பத்தை, வெப்பநிலையைப் பொறுத்து மாறும் மின்தடையைக் கொண்டு கண்டறியப் பயன்படுகிறது. வெப்பக் கதிர் அளவி ஒரு உறிஞ்சும் பகுதியைக் கொண்டுள்ளது. மெல்லிய உலோகம், மாறாத வெப்பநிலைக் கொண்ட வெப்பத் தேக்கியுடன் (reservoir) இணைக்கப்பட்டுள்ளது. உறிஞ்சும் பகுதியை அடையும் எந்ததொரு வெப்பக் கதிரால், அதன் வெப்பநிலையை வெப்பத் தேக்கியின் வெப்பநிலையை விட அதிகமாகிறது. வெப்ப உட்கவர்வுதிறன் அதிகரிக்கும் போது வெப்பநிலையும் அதிகரிக்கிறது. உள்ளார்ந்த வெப்ப மற்றும் நேர மாறிலி (intrinsic thermal time constant), உணர்கருவியின் வேகத்தை அதிகரிக்கிறது. இது வெப்ப ஏற்புத் திறனுக்கும் வெப்பக் கடத்துதிறனுக்கும் இடையேயான விகிதத்திற்குச் சமம்.

வெப்பநிலை மாற்றம் மின்தடை வெப்பமானியால் அளக்கப்படுகிறது. உலோக வெப்பக் கதிர் அளவிகள் குளிர்விக்கப்படாமலே தொடர்ந்து வேலை செய்யும் தன்மை கொண்டவை. இவை மெல்லிய உலோகத் தகடு அல்லது சுருளால் உருவாக்கப்படுகிறது. குறைகடத்தி அல்லது மீக்கடத்திகளால் பெரும்பாலான வெப்பக் கதிர் அளவிகள் உருவாக்கப்படுகின்றன. கடுங்குளிர்பெறுமுறை துகள் கண்டுணரிகளைக் (Cryogenic particle detectors) கொண்டு இக்கருவி இயக்கப்படுகிறது. இதனால் வெப்பக் கதிர் அளவியின் துல்லியத்தன்மை சிறப்பாக உள்ளது. ஒளியணு மற்றும் அயனியாக்கும் கதிர்கள் என அனைத்துக் கதிர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கரும்பொருள் போன்ற எந்த கதிர்வீச்சுக்கும் இக் கருவியைப் பயன்படுத்தலாம். மிகவும் துல்லியமான வெப்பக் கதிர் அளவிகளில் மீள அமைத்தல் மெதுவாக நடைபெறும். வெப்ப உணரிகள் என அழைக்கப்படுகிறது.

லாங்லியால் உருவாக்கப்பட்ட முதல் வெப்பக் கதிர் அளவி, கருப்பு மை பூசப்பட்ட இரண்டு பிளாட்டினம் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. வீட்ஸ்டன் சமனச்சுற்றுடன் இணைக்கப்பட்ட இரண்டு பிளாட்டினத் தகடுகளும், இது ஒரு சக்திவாய்ந்த கால்வனாமீட்டர் மற்றும் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தகடுகளின் மீது விழும் மின்காந்தக் கதிர்வீச்சு, அதன் மின்தடையை மாற்றுகிறது. 1880 ல் உருவாக்கப்பட்ட லாங்லியின் வெப்பக் கதிர் அளவி கால் மைல்லுக்குப்பால் உள்ள பசுவின் உடல் வெப்பத்தை உணர உதவியது. இக் கருவி வெப்பத்தைக் கொண்டு நிறமாலையை உணரப் பயன்படுகிறது. பிரான்ஃகோபர் கோடுகளைக் கொண்டு அவை கண்டறியப்படுகின்றன. அவர் அணுவினுடைய மற்றும் மூலக்கூற்று உட்கவர் வரிகளை (absorption lines) கட்புலனாகும் நிறமாலையில் அகச்சிவப்புக் கதிர் பகுதியைக் கொண்டு கண்டறிந்தார். 1892 ல் நிக்கோலா தெஸ்லா, தனது மின்னோட்டம் சார்ந்த சோதனைகளைச் செய்ய, லாங்லியின் வெப்பக் கதிர் அளவி பயன்படுத்த தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்றார். வெப்பக் கதிர் அளவியைக் முதலில் வடிவமைத்த சாமுவேல் பியேர்பாயிண்ட் லாங்லி பிப்ரவரி 27, 1906ல் தனது 71வது அகவையில், தென் கரோலினாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!