ஆன்லைன் வியாபாரம்… டெலிவரி ப்ளாட்ஃபார்ம்…. குழப்பமும்… விளக்கமும்..

வளர்ந்து வரும் வியாபார உலகில் மின்வணிகம் (E-commerce) என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம்.  பொதுவாகவே எந்த ஒரு புதுவகையான விஞ்ஞான வளர்ச்சி அறிமுகம் ஆகும் பொழுது அதன் நன்மைகளை வைத்து நன்மையடைவதை விட, தவிர்க்க கூடிய பாதகங்களை முன்னிருத்தி எதிர்ப்புகள் வந்து பிறகு அதே ஒரு தவிர்க்க முடியாத விசயமாக மாறுவதை நாம் பார்த்து வருகிறோம். அதற்கு உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு திரைப்படங்கள் திரையரங்குகள் தவிர்த்து OTT என்ற அடிப்படையில் ஒளிபரப்பும் முறையை முன் வைத்த்பொழுது பலத்த எதிர்ப்புகள் கிளம்பி அடங்கி, தற்காலத்தில் அந்த முறை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்பது தற்கால உதாரணம்.

அதே போல் மின் வணிகம் என்பது அனைத்து தொழிலையும் நசுக்கி விடும் என்ற எண்ணம் துவங்கி எதிர்ப்புகள் தொடங்கியது, ஆனால் தற்காலத்தில் கல்லூரி பாடத்தில் வணிகவியல் என்பது, இன்றைய சூழலுக்கேற்ப மின்வணிகவியல் என்ற பட்டப்படிப்பும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பாக கல்லூரிகளில் இருப்பது, மின்வணிகத்தின் முக்கியத்தை வலியுறுத்துகிறது.

ஆனால் அதையும் தாண்டி மின்வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஆன்லைன் வணிகம் (Online Business) மற்றும் Delivery Platform வியாபாரம் இரண்டுமே மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற விமர்சனத்தை இந்த இரண்டு கூற்றின் தன்மையை அறியாமலே வைத்த வண்ணம் உள்ளனர்.  ஆனால் இந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமை மற்றும் அதன் தன்மையை புரிந்தால் குழப்பம் தீரும்.

ஆன்லைன் வியாபாரம்:-

இந்த வியாபாரத்தில் இரண்டு வகைப்படும், ஒரு நிறுவனம் கட்டமைப்பட்ட இணையதளத்தை உருவாக்கி, அதில் பலதரப்பட்ட நிறுவனங்களின் பொருட்களை தரக்கட்டுபாடுகளுடன், சோதனைகள் செய்து, வாடிக்கையாளர்கள் திருப்தி அடையாத பட்சத்தில் செலுத்திய பணத்தை திருப்பி கொடுப்பார்கள் அல்லது மாற்று பொருட்களை கொடுப்பார்கள்.  ஆனால் மற்றொரு வகையோ இணையதளத்தில் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் பின்னணி அல்லது பொருட்களின் தரத்தை சோதனை செய்யாமல் தங்களுடைய வருமானத்தை மட்டுமே முன்னிலைபடுத்தி பதிவிடுவார்கள், இது போன்ற ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலமாகவே 99% சதவீதம் ஏமாற்றப்படுகிறார்கள். இதற்கு முக்கிய்காரணம் வாடிக்கையாளர்களும் இத்தளங்கள் எங்கிருந்து, யாரால் இயக்கப்படுகிறது என்பதை அறியாமல் பொருட்களை கொள்முதல் செய்வது.  ஆனால் மொத்த ஆன்லைன் பரிவர்த்தைனையில் இது போன்ற சம்பவங்கள் சிறய சதவீதமாக இருந்தாலும், இப்பிரச்சினையை மட்டுமே மையபுள்ளியாக வைத்து ஒட்டு மொத்த ஆன்லைன் வியாபாரிகளுமே ஏமாற்று பேர்வழிகள் என்ற ஒரு மாய் தோற்றத்தை உருவாக்குவது மிகவும் வேதனையான விசயம்.

டெலிவரி ப்ளாட்ஃபார்ம்:-

இந்த டெலிவரி ப்ளான்ஃபார்ம் என்பதில் மின்பரிவர்த்தனைகள் இருந்தாலும், ஆன்லைன் வியாபாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கூற்று ஆகும்.  இந்த வியாபார முறையின் அடிப்படையே ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வியாபாரிகளை ஒன்றிணைத்து, தேவையுடையவர்களுக்கு பொருட்களை டெலிவரி ப்ளாட்ஃபார்ம் வியாபாரம் செய்ய கூடியவர்களே நேரடியாக தங்களின் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்ட நம்பகமான நபர்கள் மூலம் சுகாதாரமான முறையில், பாதுகாப்புடன் கொண்டு சேர்ப்பார்கள்.

மேலும் இந்த வியாபாரத்தின் மூலம் வெளி உலகுக்கு தெரியாமல் இருக்கும் சிறு தொழில் புரிபவர்களுக்கும் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய தளமாக அமைகிறது. அதேபோல் இந்த டெலிவரி ப்ளாட்ஃபார்ம் மூலம்   ஒரு குறப்பிட்ட தெரு, பகுதி வியாபாரத்தை மட்டும் நம்பி இருந்தவர்களுக்கு அதே ஊரில் பிறபகுதி மக்களும் வாங்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதுடன், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுகிறது.

ஆக ஆன்லைன் வியாபாரம் மற்றும் டெலிவரி ப்ளாட்ஃபாரம் ஆகிய இரண்டும் வெவ்வேறு கோணத்தை கொண்டது என்பதை அறிந்து, வாடிக்கையாளர்களும் தாங்கள் வாங்கும் பொருள் மற்றும் விற்பனையாளர்களை பற்றியும் முழுமையாக அறிந்து செயல்படுவது கடமையாகும்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..