Home செய்திகள் நரபலி இல்லீங்க, அது நாய்ங்க! பழனி அருகே பரபரப்பை கிளப்பிய தோட்டம்! புதைக்கப்பட்டது நாய் என தெரிய வந்தது..

நரபலி இல்லீங்க, அது நாய்ங்க! பழனி அருகே பரபரப்பை கிளப்பிய தோட்டம்! புதைக்கப்பட்டது நாய் என தெரிய வந்தது..

by Askar

நரபலி இல்லீங்க, அது நாய்ங்க! பழனி அருகே பரபரப்பை கிளப்பிய தோட்டம்! புதைக்கப்பட்டது நாய் என தெரிய வந்தது..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேல்கரைப்பட்டி கிராமத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இறந்த உடல் புதைக்கப்பட்டதற்கான தடையும் இருந்துள்ளது. ஆடு மேய்க்க வந்த நபர்கள் தனியார் நிலத்தில் உடல் புதைக்கப்பட்டது போல தடயங்கள் தென்பட்டதால் கீரனூர் போலீசாருக்கும் மற்றும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு பழனி வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் தகவல் அறிந்து கிராம மக்கள் பலரும் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேல்கரைப்பட்டி கிராமத்தில் யாரும் இறக்காத நிலையில் உடலை புதைத்த தடயம் எப்படி வந்தது என்பது தெரியாததால் கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் விஷயம் பெரிதாகி பரபரப்பான நிலையில் விவசாய நிலத்தில் நாயின் உடலை புதைத்ததாக ஒருவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்து பிறகு புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று தோண்டி பார்த்தபோது நாயின் உடல் இருந்ததை உறுதி செய்தனர். பாசமாக வளர்த்த நாய் இறந்ததால் விவசாய நிலத்தில் கொண்டு சென்று புதைத்ததாகவும், மக்கள் சந்தேகம் அடைந்து பெரிது படுத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். பாபநாசம் படம் போல மனித உடல் இருக்கும் என நினைத்து போலீசார் விசாரணை நடத்தி தோண்டியபோது நாயின் உடல் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!