Home செய்திகள் ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் மின்சார ரீடிங் கணக்கீட்டு முறையில் உள்ள குளருபடிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் – SDPI கட்சி வலியுறுத்தல்.!

ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் மின்சார ரீடிங் கணக்கீட்டு முறையில் உள்ள குளருபடிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் – SDPI கட்சி வலியுறுத்தல்.!

by mohan

எஸ்.டி.பி.ஐ கட்சி – திருவாடனை சட்டமன்ற தொகுதி இணை செயளாளர் முகமது ரிஸ்வான் தொிவித்திருப்பதாவது -கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே ஆர்.எஸ் மங்கலத்தில் மின் கணக்கீட்டில் குளருபடிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மின்சாரம் பயன்படுத்தப்பட்டதை விட அதிக ரீடிங் எடுக்கப்படுவதாகவும் சாதாரண கட்டணத்தை விட அதிக கட்டணம் செலுத்துவதாகவும் அதிகபட்சமாக 2 லட்சம் வரை செலுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பயனாளி இல்லாமல் பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்கும் கூட மின் கட்டணம் 2000 வரை செலுத்தும் நிலை உள்ளது.

இந்த பிரட்சனை தொடர்பாக உதவி மின் பொறியாளர் அவரகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அனைத்தையும் சரிசெய்வதாக அப்போது அவர் உறுதியளித்தார். ஆனால் பிரட்சனையை சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே மேற்குறிப்பிட்ட பிரட்சனைகளை மின்சார வாரிய அலுவலர்கள் உடனடியாக சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!