Home செய்திகள் தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டுக்கள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்..

தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டுக்கள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாநகர மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்து நகர் கடற்கரை பூங்காவில் தண்ணீர் சாகச விளையாட்டு மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன்பு LCD திரை ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் “தற்போது Jet Ski ,Wind Surfing, Banana Ride,Bump Ride, மற்றும் Stand up Board, ஆகிய சாகச விளையாட்டுக்கள் துவங்கப்பட்டுள்ளது, மேலும் Speed Boat, family Boat Ride, Snorkelling,Scuba Dive, மற்றும் Sports fishing, போன்ற சாகச விளையாட்டுகளில் படிப்படியாக பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேற்காணும் வசதிகள் மூலம் தூத்துக்குடி மாநகர மக்கள் அதிக பொருட்செலவில் வெளி இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதற்கு மாறாக சிரமமின்றி குறைந்த செலவில் குடும்பத்துடன் குதூகலமாக பொழுதை கழிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் தண்ணீர் சாகச விளையாட்டுக்கள் அமையும் வகையில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் ,நெல்லை ஆவின் சேர்மன் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!