ரயில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கண்டுபிடித்து ஒப்படைத்த மதுரை ரயில்வே போலீசார்…

பிரபாகரன், த/பெ. பாரதிதாசன், 678 அல்லிநகரம், பெரம்பலூர் என்பவர் வண்டி எண் 12635 வைகை எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து அரியலூர் வந்து இறங்கும் பொழுது தான் கொண்டு வந்த பையை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டார். அதில் பணம் ரூபாய் 8500, ஒரு மைக்ரோ மேக்ஸ் மொபைல் போன் மற்றும் 2 பேண்ட் மற்றும் டீ சர்ட் இருந்ததாகவும் அதை எடுத்துக் கொடுக்கும்படி திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்தகவலின் பேரில் திருச்சியிலிருந்து வண்டி ரோந்து சென்ற மதுரை இருப்புப்பாதை காவலர் 1279 திரு.பாலாஜி என்பவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் கண்டெடுக்கப்பட்டு , பிரபாகரனிடம் தக்க சான்றுகள் பெற்று ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன பொருளை கண்டுபிடித்து ஒப்படைக்க அவரை காவல்துறையினர் உயரதிகாரிகள் பாராட்டினார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்