காட்பாடியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது….

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் நேற்று இரவு கஞ்சா கடத்துவதாக போதை ஒழிப்பு போலிசாருக்கு (NIB) வந்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த வாலிபரை சோதனை செய்தபோது அவர் வைத்து இருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் விசாரணையில் அவர் வேலூர் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த அசோன் (26) என்பதும் அவர் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து வேலூரில் விற்பனை செய்யா இருந்ததும் தெரிந்தது அவரை கைது செய்த போதை ஒழிப்பு போலிசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனார்.