தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் அலமேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி வரவேற்றார். நடைபெற்ற கூட்டத்தில் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், பள்ளியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயல்படுவது என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, குடிநீர், கழிவறை, வகுப்பறை, வளாக தூய்மை குறித்து பள்ளி மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மற்றும் ஆசிரியர்கள் சங்கீதா, நாராயணன், அரசு, மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.
69
You must be logged in to post a comment.