Home செய்திகள் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு 

ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு 

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட  அக்னி தீர்த்தம் முக்கிய சுற்றுலாதலமாகவும், பக்தர்களுக்கான முக்கிய புனிதத்தலமாகவும் எண்ணற்ற பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. இந்நிலையில் அக்னி தீர்த்தம் பகுதியில் தொடர்ச்சியாக கழிவுநீர் கலப்பதாலும், பக்தர்கள் நீராடிய பின்பு ஆடைகளை அங்கேயே விட்டு செல்வதாலும் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயத்தோடும் இருப்பதாலும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களின் மீன்பிடி நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் 

இராமேஸ்வரம் நகராட்சியும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து, 7 நாட்களுக்குள் அக்னி தீர்த்தத்தை தூய்மைப்படுத்த தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி நடவடிக்கை மேற்கொண்டும், அக்னி தீர்த்தமானது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதை உறுதி செய்தும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை விரிவான கூட்டறிக்கையாக சமர்பிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com