மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு, பதிவுத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை.

மதுரை மாவட்டம், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் அரை ஆடைப்புரட்சி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மதுரை மாநகர் மேலமாசி வீதியில் அமைந்துள்ள கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அண்ணல் மகாத்மா காந்தியடிகள் மதுரை மாவட்டத்திற்க்கு 5 முறை வருகை புரிந்துள்ளார். மதுரை மாநகருக்கு மகாத்மா காந்தியடிகள் இரண்டாவது முறையாக 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22-ஆம் நாள் முதன்முதலில் காந்தியடிகள் அரையாடையுடன் பொதுக் கூட்டத்தில் பேசிய இடமான தற்போதைய காந்தி பொட்டலில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நமது தேசத் தந்தை மகாத்மாகாந்தி என்றதும் நம் நினைவிற்கு வருவது எளிமையான உடையில் வலம் வந்த அவரின் உருவம்தான்.அது, தமிழகத்தோடு குறிப்பாக மதுரையுடன் தொடர்புடையது என்பது நமக்கெல்லாம் கிடைத்துள்ள பெருமையாகும். காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் நூற்றாண்டு தினம் இன்று (22.09.2021) கொண்டாடப்படுகிறது.வறுமையில் வாடித்தவிக்கும் பாமரமக்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்தும் வகையில் அண்ணல் காந்தியடிகள் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22-ஆம் நாள் மதுரை மாநகர் மேலமாசி வீதியில் உள்ள புனித அறையில் முழந்தாள் வரை ஆடை உடுத்தும் விரதத்தை மேற்கொண்டார். தற்போதைய, கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் ,வரலாற்று சிறப்புமிக்க பல அறியவகை புகைப்படங்களை பார்வையிட்டார். இந் ,நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..