மதுரையில் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் : காரில் சுற்றிய 10 பேர் கைது.

மதுரை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மூட்டை மூட்டையாக கொண்டு வந்த 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரண்டு சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர்.அந்த கார்களில் 2000,500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு 3 பைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக கோவையை சேர்ந்த அக்பர்., ஈரோடு சரவணன்., மதுரையை சேர்ந்த அன்பு, கேரளாவை சேர்ந்த டோமி தாஸ், கரூரை சேர்ந்த யோகராஜ், சென்னையை சேர்ந்த சுனில்குமார், வேலூரை சேர்ந்த பொன்ராஜ், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தண்டீஸ்வரன், நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ்உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் காவலர் உடை, போலி ரூபாய் நோட்டுகள், மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..