Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரொனா தொற்று காரணமாக மதுரையில் முக்கிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு..

கொரொனா தொற்று காரணமாக மதுரையில் முக்கிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு..

by ஆசிரியர்

கொரோனா தொற்று காரணமாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் கிரைம் பிரான்ச் தெற்கு மாசி வீதி உள்ளிட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்ட பகுதியாக மதுரை தெற்கு மாடவீதி, கிரைம் பிரான்ச், கூடலழகர் பெருமாள் கோவில் செல்லும் பகுதி, மதுரைக் கல்லூரி மேம்பாலம் மற்றும் தெற்கு வாசல் செல்லும் பகுதி ஆகியவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்குவாசல் காவல் நிலையத்தில் பணியாற்றிய இருவருக்கு தோற்று உறுதியானதை அடுத்து தற்காலிகமாக தெற்குவாசல் காவல் நிலையம் மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் தெற்கு வாசல் காவல் நிலையத்தைச் சுற்றி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று (28/04/2020) மட்டும் நான்கு பேருக்கு கொரோனா தொட்டு உறுதியானதை அடுத்து மதுரையில் பல பகுதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகவே அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மதுரையில் செல்லூர், பழங்காநத்தம், ஆனையூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!