
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எல்லோரும் நம்முடன் என்கிற இணையவழி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கீழக்கரையில் நகர கழக செயலாளர் பஷீர் அகமது மற்றும் கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர், வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா(எ) முத்துராமலிங்கம் முன்னிலையிலும் “எல்லோரும் நம்முடன்” என்கின்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கீழக்கரை பகுதி மக்கள் ஏராளமான ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொண்டு தங்களை உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
மேலும் இதில் முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு,மாவட்ட கவுன்சிலரும், வழக்கறிஞருமான ரவிச்சந்திரராமவன்னி, மண்டப ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் கீழக்கரை நகர் துணை செயலாளர் ஜமால் பாருக், கென்னடி, அவைத்தலைவர் மணிகண்டன், மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், தகவல் தொழில்நுட்பம் அணி அமைப்பாளர் SKV முகம்மது சுகைபு, மாவட்ட பிரதிநிதிகள் மரைக்காயர், ஜபாருல்லா, ராஜா, மக்கள் டீம் காதர், முன்னாள் துணைச் சேர்மன் ஹாஜா முஹைதீன் மரகபா சித்திக், பகுருதீன், இளைஞர் அணி பயாஸ், நயீம், சுபியான் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞரணி பொறுப்பாளர் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் விழா ஏற்பாடு செய்திருந்தார்.
You must be logged in to post a comment.