Home செய்திகள் கோலாகலமாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..ஒரு பார்வை ..

கோலாகலமாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..ஒரு பார்வை ..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று பொங்கல் திருநாளையொட்டி கோலாகலமாக நடந்தேறியது. இந்த ஜல்லிக்கட்டில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்று பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக துவங்கியது.

மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என, முதல் சுற்று, இரண்டாம் சுற்று என சுற்றுக்கணக்கில் இந்த போட்டிகள் நடைபெற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய காளைகளை உற்சாகத்தோடு அடக்கி வீரர்கள் பரிசுகளை வென்றனர். வென்றனர், பலரை காளைகள் வென்றன. இதில் 40 பேர் காயமடைந்தனர்.

இவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர்தான் மைதானத்துக்குள் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது வேறு எப்போதும் இல்லாத முதன் முதலாக செய்யப்படும் புதிய அம்சம் ஆகும்.

செய்தி:- கனகராஜ், மதுரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!