
கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஹாஜா அலாவுதீன் என்கிற 32 வயது இளைஞருக்கு இரண்டு கிட்னிகளும் முற்றிலும் செயலிழந்த நிலையில் கடந்த 10 மாதங்களளாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து வருகின்றனர். ஒரு முறை டயாலிசிஸ் செய்வதற்கு ரூ.5000 வரை செலவாகிறது. தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வருவதால் தற்போது இவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் இவரது தாயார் தனது கிட்னியை தன் மகனுக்கு கொடுக்க முன் வந்துள்ளார். இதற்கான கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நோன்பு பெருநாள் கழித்து கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது. இந்த ஆபரேஷனுக்கான செலவு, மருந்து மாத்திரைகள் மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சைக்கான செலவு, ரூ. 5,00000 (ஐந்து இலட்சம்) முதல் ரூ.7,00000 (ஏழு இலட்சம்) வரை ஆகிறது.
எவ்வித வருமானமும் இல்லாத நிலையில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இந்த இளைஞரின் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு கீழை நியூஸ் வாசகர்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ACCOUNT NAME : HAJA ALAVUDEEN & MUBIKA FATHIMA
ACCOUNT NUMBER : 013801000034801
BANK NAME : INDIAN OVERSEAS BANK
BRANCH : KILAKARAI
IFSC CODE : IOBA0000138
தொடர்புக்கு :
8015918744 / 9952401280 / 9003521366
தகவல் : கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை, கிழக்குத் தெரு, கீழக்கரை
(உண்மை தன்மை உறுதி செய்யப்பட்டது.)
You must be logged in to post a comment.