Home செய்திகள் வேளாண் கல்லூரி மாணவிகளின் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் !

வேளாண் கல்லூரி மாணவிகளின் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமடை ஊராட்சி கருக்காத்தி கிராமத்தில் உலக புவி தினத்தை முன்னிட்டு கிராம மக்களிடத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் தாமரைச்செல்வி, சிந்துபிரியா, சுகந்தி, சுமதி, தமிழ்ச்செல்வி, சூரியலட்சுமி, சுவாதி, வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் பற்றி கிராம விவசாயிகளிடம் எடுத்துக் கூறியது பின்வருமாறு: காலநிலை அழுத்தத்தை சமாளிக்க சகிப்புத்தன்மை கொண்ட பயிர்களை வளர்ப்பது போன்ற தகுந்த தணிப்பு தொழில்நுட்பங்களின் தழுவல், திறமையான உற்பத்தித்திறன் மற்றும் வள பயன்பாட்டிற்கான நீர் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர்களை சரியான நேரத்தில் கண்காணிப்பதற்கான வேளாண் ஆலோசனைகள், மண்ணின் கரிம கார்பனை உருவாக்குவதற்கும், தாவர வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும், உரம் மேலாண்மை செய்வதற்கும் பாதுகாப்பு விவசாய நடைமுறைகள், இந்தச் சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு, விவசாய அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஆகியவை கிராம அளவில் செயல்படுத்தப்படும் பல முன்முயற்சி கொள்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com