Home செய்திகள் ஆதரவற்ற முதியவரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு..

ஆதரவற்ற முதியவரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு..

by Abubakker Sithik

ஆதரவற்ற முதியவரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு..

தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணிகளை பசியில்லா தமிழகம் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆதரவற்ற நிலையில் 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு பெண் தங்கியிருப்பதாக கடையநல்லூர் காவல் ஆய்வாளர் மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது. உடனடியாக களத்திற்குச் சென்று அந்த முதியவரை மீட்டெடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து தேவையான முதலுதவி செய்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து காவல்துறை ஆய்வாளர் மூலமாக GENERAL MEMO வாங்கி பசியில்லா தமிழகத்தின் தென்காசி மாவட்டம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் அனுமதித்து தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றார்.

அந்த இல்லத்தில் அவர்களுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பாய், தலையணை மற்றும் அடிப்படை பொருட்கள் அடங்கிய WELCOME KIT கொடுத்து இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து அன்புடன் வரவேற்று இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற முதியவர்கள் யாரேனும் இருந்தால் பசியில்லா தமிழகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த நபர் மீட்டெடுக்கப்பட்டு அவருக்கு உரிய உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் அனைத்தும் இலவசமாக செய்து கொடுப்பதற்கு பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு தயாராக இருக்கிறது. ஆதரவற்றோருக்கு உதவும் பணியில் பசியில்லா தமிழகம் அமைப்புடன் இணைந்து கொள்வதற்கு 93639 14416 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com