Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஊருக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள் காலையிலிருந்து மாலை வரை ஒரே இடத்தில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி…

ஊருக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள் காலையிலிருந்து மாலை வரை ஒரே இடத்தில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி…

by ஆசிரியர்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று அதிகாலை மூன்று காட்டு யானைகள் ஊருக்குள் வந்து போய்விட்டது என்று கிராம மக்கள் கூறினார்கள் மீண்டும் மதியம் 12 மணி அளவில் அதே மூன்று காட்டு யானைகள் பள்ளிப்பட்டி அருகே மாந்தோப்பில் முகாமிட்டுள்ளது. இரண்டு பெண் யானை ஒன்று ஆண் யானை முகாமிட்டுள்ளது பொதுமக்கள் கண்டு அச்சப்பட்டு உள்ளன அதிர்ஷ்டவசமாக தோட்டங்களையும் விவசாய நிலங்களையும் எந்த ஒரு சேதமும் படுத்தவில்லை.

வனத்துறையினர் விரைந்து வந்து யானை வேறு எங்கும் செல்லாமல் இருக்க பாதுகாத்து வந்தனர்.  என்ன ஒரு அதிர்ச்சியான விஷயங்கள் என்றால் மாலை ஐந்து மணி வரைக்கும் மூன்று யானைகளும் ஒரே இடத்தில் இருந்தது. விவசாய நிலங்களும் மாந்தோப்புகளும் சேதாரம் இல்லாமல் இருந்தது. பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்று யானைகளை இரவு நேரங்களில் தான் காட்டுக்கு விரட்ட முடியும் என்று வனத் துறையினர் கூறியுள்ளனர். மாலை 6 மணி அளவில் பத்து வனத்துறையினர்   மற்றும் ஊர் பொதுமக்கள் தீப்பந்தம் ஏங்கி ஊருக்குள் யானை புகுந்துவிடாமல் பாதுகாப்பாக நிலத்தின் வழியிலேயே மூன்று காட்டு யானைகளை சஞ்சீவிராயன் காட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளது. குடிநீர்  இல்லாத காரணத்தினால் காட்டில் இருக்கும் விலங்குகள் ஊருக்குள்ளே வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் வனத்துறையினர் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!