Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..

by ஆசிரியர்

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” S.P. முரளி ரம்பா எச்சரிக்கை

நாளை (18/04/2019) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இதனை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் ஷீமா ஜெயன் , மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா ஆகியோர் நேற்று (16.04.2019) மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் உள்ள மொபைல் வாகனங்களை ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதிக்கு 25மொபைல் வாகனங்களும், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தலா 21 மொபைல் வாகனங்களும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 20 வாகனங்களும் மற்றும் கோவில்பட்டி தொகுதிக்கு 22 வாகனங்களும், ஆக மொத்தம் 130 மொபைல் வாகனங்கள்இன்று காலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜராகி அவைகள் ஆய்வு செய்யப்பட்டு அவைகளுக்கு நியமிக்கப்பட்ட மொபைல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

200 ஊர்க்காவல் படையினர், 300முன்னாள் ராணுவத்தினர், 60 ஓய்வு பெற்ற காவல்துறையினர் மற்றும் 30  தீயணைப்புத்துறையினர் மைதானத்தில் ஆஜராகி அவர்களுக்கான பணி ஒதுக்கீடும் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மகாராஷ்டிரா சிறப்பு காவல் படை , இரயில்வே சிறப்பு காவல் படை,தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் ஆகியோர் மொத்தம் சுமார் 3585போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எனவே மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!