Home செய்திகள் “எதிர்க்கட்சிகளை பயமுறுத்த தேர்தல் கமிஷனும் வருமான வரித்துறையும் மோடியுடன் கூட்டணி”: வருமானவரி சோதனைக்குப் பின் கனி மொழி குற்றசாட்டு

“எதிர்க்கட்சிகளை பயமுறுத்த தேர்தல் கமிஷனும் வருமான வரித்துறையும் மோடியுடன் கூட்டணி”: வருமானவரி சோதனைக்குப் பின் கனி மொழி குற்றசாட்டு

by ஆசிரியர்

தூத்துக்குடியில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழி வீட்டில், வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வேட்பாளராக, கனிமொழி போட்டியிடுகிறார். நேற்று மாலை, கோவில்பட்டியில், ம.தி.மு.க.,பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்ற, இறுதி கட்ட பிரசாரத்தில் பங்கேற்ற பின், துாத்துக்குடி வந்தார். துாத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள வாடகை வீட்டில்,கனிமொழி குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். நேற்று இரவு, 8:30 மணிக்கு, உதவி ஆணையர் கார்த்திகா தலைமையிலான வருமான வரித்துறையினர் 14 பேர்,தேர்தல் பார்வையாளர்கள் 8 பேர் என மொத்தம் 22 பேர் கொண்ட  அதிகாரிகள், திடீரென அவர் வீட்டில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கனிமொழி, அவரது கணவர் அரவிந்தன் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். வீட்டில் இருந்து யாரையும் வெளியே அனுமதிக்க வில்லை; வெளி நபர்களும் உள்ளேஅனுமதிக்கப்பட வில்லை. சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் பணமோ, ஆவணங்களோ எதுவும் சிக்காத நிலையில் அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு வெளியேறினர்

முன்னதாக அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்க்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் வருமான வரித்துறையினர் வந்த வாகனத்தை இரண்டு தெருக்கள் தள்ளி இருட்டில் நிறுத்தியிருந்தனர், பின்னர் அதுவும் அங்கிருந்து கண்காணாத வேறிடத்திற்க்கு கொண்டு செல்லப் பட்டது

சோதனை முடிந்த நிலையில் அதிகாரிகள் வெளியேற முடியாத அளவிற்க்கு தொண்டர்கள் அதிகளவில் ஆக்ரோஷத்துடன் மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டு கொண்டிருந்ததால் , தி மு க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனின் வாகனத்திலும், மற்றுமொரு வாடகை வாகனத்திலும் அவர்கள் ஏறிச் சென்றனர்

சோதனைக்குப் பின் பத்திரிக்கையாளர்களுக்கு  பேட்டியளித்த கனிமொழி  “வருமான வரித்துறையினர் எனது வீட்டை சோதனையிட இன்று வந்தனர், நான் அவர்களிடம் சோதனையிட உரிய ஆவணம் உள்ளதா என கேட்டேன் ஆனால் அவர்களிடம் சரியான பதில் இல்லை இருந்தாலும் அவர்கள் சோதனை இடுவதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தோம். சோதனைக்கு பிறகு ஒன்பது முப்பதுக்கு எனக்கு ஒரு சம்மன்  கொடுக்கப்பட்டது அதில் என்னை  அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உடனே பதில் சொல்ல சொல்லியிருந்தது, இது எனக்கு தெரிந்த வரை சட்டத்திற்குப் புறம்பானது

சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் யாரை சோதனையிட வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது candidate candidate என்று இரண்டு முறை சொன்னார்கள் அதாவது மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான என்னை சோதனையிட வந்ததாக கூறினார்கள் ஒரு மணி நேர சோதனை நடத்தி விட்டு எதுவும் கிடைக்கவில்லை என அவர்களே ஒப்புக் கொண்டார்கள்

அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சோதனையிட வந்ததாகவும் ஆனால் சோதனையில் எதுவும் அகப்படவில்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டு கிளம்பி சென்றார்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கோடி கோடியாக பணம் வைத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் சோதனையிட தயாரா என கேட்டுள்ளார், நானும் அதையேதான் கேட்க்கிறேன் தேனியில் நடக்கும் சம்பவங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம் அங்கு வருமானவரித்துறையினர் சோதனையிட தயாரா என நான் கேட்கிறேன்

இங்கே தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காகவும் பயமுறுத்துவதாகவும் நினைத்துக் கொண்டு இங்கே வந்து மறுபடியும் மறுபடியும் 2 மாவட்டச் செயலாளர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு முறை அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் தோட்டத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் வீட்டிற்கு வந்து சோதனை செய்து சென்றிருக்கிறார்கள்

வேலூர் தேர்தலை நியாயமற்ற முறையில் நிறுத்தியிருக்கிறார்கள்  அதே போல் அதை ஒரு காரணமாக வைத்து தோல்வி பயத்தால் தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்தி விடலாம் என்ற நப்பாசையில் சோதனை இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

ஆனால் இதற்கெல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் பயந்த கட்சி கிடையாது எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம் ஆனால் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது எல்லோரும் சொல்வதுபோல தேர்தல் கமிஷனும் வருமான வரித்துறையும் மோடியுடன்  கூட்டணி சேர்ந்து கொண்டு  எல்லா எதிர்க்கட்சிகளையும் பயமுறுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் இரண்டு துறைகளும் அந்த கூட்டணியில் ஒன்றாகவே செயல்படுவதாக எங்களுக்கு அச்சம் இருக்கிறது

முறையான எந்த ஆவணங்களையும் காண்பிக்காமல் சோதனை நடத்தி இருக்கிறார்கள் ஆனாலும் அவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் நாங்கள் சோதனையிட அனுமதி அளித்தோம் ஒத்துழைப்பு கொடுத்தோம் வந்த அதிகாரிகள் என்னை யார் என்று கேட்டார்கள் நான்தான் candidate என்று கூறினேன் ஒரு புகாரின் தகவலின் அடிப்படையில் சோதனையிட வந்ததாக கூறினார் அது என்ன புகார் என்ன தகவல் என்று என்னிடம் கூறவில்லை

ஆனால் இங்கு பணம் இருப்பதாக ஒரு புகார் வந்ததால் அதை பற்றி கூறி  என்னிடம் விளக்கம்  கொடுக்கச் சொன்னார்கள்

இந்த சோதனை வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழக மற்றும் எங்களுடைய கூட்டணி வேட்பாளர்கள் மீது அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே இதைப் போன்ற சோதனைகளை செய்கிறார்கள், இதைக் காட்டி எங்களை பயமுறுத்த முடியும் என நினைக்கின்றார்கள் வேண்டுமென்றே இதை செய்கிறார்கள் வருமான வரித்துறையினரின் ஆசை நிராசையாகி விட்டது

நிச்சயமாக தோல்வி பயத்தால் தான் இதைச் செய்திருக்கிறார்கள் நாங்கள் இதனால் துவண்டு விட மாட்டோம் இன்னும் உத்வேகத்தோடு தேர்தல் பணிகளை ஆற்றுவோம் திராவிட முன்னேற்றக் கழகம் இதையெல்லாம் தாண்டி எவ்வளவோ சந்தித்து வந்திருக்கக் கூடிய ஒரு எஃகு  கோட்டை அதை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது, எங்களுடைய தொண்டர்கள் இப்போது இருப்பதை விட இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள்” என்றார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!