Home செய்திகள் மின்சார தடை முன்னே.. மழை வரும் பின்னே.. இது கீழக்கரையில்…

மின்சார தடை முன்னே.. மழை வரும் பின்னே.. இது கீழக்கரையில்…

by ஆசிரியர்

கீழக்கரையில் மழை என்பது பருவம் கடந்து, மிகவும் அரிதான நிகழ்வாகவே கடந்த பல வருடங்களாக நிகழ்ந்து வருகிறது.  ஆனால் அந்த மழை வரும் முன்பே மின் தடையை ஏற்படுத்தி பொது மக்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் பழக்கத்தை கையாண்டு வருகிறது மின்சார வாரியம்.

அவ்வாறு மின்பழுது எற்பட்டாலும் சாமான்ய மக்கள் EB ஆட்களை தொடர்பு கொள்ள முடியா நிலை.  வீட்டில் குழந்தை, கர்ப்ப கால பெண்கள், முதியவர்கள் பெரும் இன்னலை சந்திக்கின்றனர். பேட்டரி கரண்ட்டும் பல நேரங்களில் கூப்பாடு போட்டு முடிந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நிரந்தர மின் பணியாளர்கள் குறைவு என்பதுதான்.

கீழக்கரை நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமம் முழுவதற்கும் நிரந்தல மின் பணியாளர்கள் இரு நபர்கள் மட்டுமே. அந்த இருவரில் ஒருவர் விடுப்பு என்றால் ஒருவரை கொண்டு கீழக்கரை துணை மின் நிலையத்தை கண்காணிக்க வேண்டும். இவர்களை போணில் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமான விசயம். கீழக்கரை துணை மின்நிலைய அலுவலக எண் 04567 41038  புகார் அளித்தால் லைன் மேனை தொடர்பு கொள்ளுங்கள் என தொடர்பை துண்டித்து விடுகின்றனர். மின்கட்டணம் செலுத்த காலதாமதமானால் உடனே வீடு தேடி வந்து இணைப்பை துண்டிக்க அவசர கதியில் முற்படும் மின்சார வாரியம், அதே மக்களுக்கு பணிபுரிவதிலும் அந்த ஆர்வத்தை காட்ட வேண்டும்.

தற்சமயம் பொதுமக்களிடம் எழும் கோரிக்கைகள்:-

1 – சாமான்ய பொதுமக்கள் மின்பழுது பற்றிய புகார் அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் போன் எண்ணை அரசு உடன் அறிவிக்க வேண்டும்.

2 –  கீழக்கரையில் உள்ள மின் இணைப்புக்கேற்ப பழுது பார்க்க ஆட்களை அதிகப்படுத்தி நியமிக்க வேண்டும்.

இதுகுறித்து சமூக அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும், அப்பொழுது வழி பிறக்க வாய்ப்புண்டு.

தகவல்: மக்கள் டீம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!