67
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையுறும்பு தேவசின்னாம்பட்டி யில் பிறந்து சில நிமிடமே ஆன பெண் சிசு முட்புதறில் வீசப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இன்று (02/10/2018) அதிகாலை சுமார் 6.மணியளவில் அவ்வழியே சென்றவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு குழந்தையை மீட்டு கேதையுறும்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
மருத்துவமனை செவிலியர்கள் குழந்தைக்கு முதலுதவி செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரக்கமற்ற இச்செயலை பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
தகவல்:-அபுபக்கர்சித்திக்
செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )
You must be logged in to post a comment.