கீழக்கரையில் பல ஆண்டுகளாக நகராட்சி கண்டு கொள்ளாத அபாய பள்ளம்…

கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட 20 வது வார்டு பகுதியான வண்ணார் தெரு கோயில் அருகில் பிரதான சாலையில் பல ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்கால் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த அபாய பள்ளத்தை துண்டு பலகைகளை கொண்டு நகராட்சி ஊழியர்கள் மூடி வைத்து உள்ளனர்.

இந்த அபாய பள்ளத்தை சீரமைப்பு செய்ய பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

இதனால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக பொதுமக்கள் இந்த அபாய பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த அபாய பள்ளத்தை சீரமைப்பு செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.