
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது சுக்கிரவார்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான பேப்பர் தயாரிக்கும் ஆலை உள்ளது. ஆலையில் திருத்தங்கல், ஆலாவூரணியைச் சேர்ந்த அருண்பாண்டியன் எனபவர் உதவியாளராக வேலை பார்த்துவந்தார். நேற்று ஆலையில் ஒரு இயந்திரம் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்து கொண்டிருந்த போது திடீர் விபத்து ஏற்பட்டதில், அருண்பாண்டியன் படுகாயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனலிக்காமல் அருண்பாண்டியன் இன்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.