சின்னக்கடை தெருவில் அபாய மின் கம்பம் அகற்றப்பட்டது – தொடர் முயற்சி எடுத்த கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு பகுதி மக்கள் பாராட்டு

கீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு வீட்டின் மீது சாய்ந்தவாறு முறித்து விழும் நிலையில் அபாய மின் கம்பம் ஒன்று ஓராண்டு காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அதே போல நகரின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற அபாய கம்பங்கள் காணப்படுகிறது. இது குறித்து மக்கள் களத்தின் அங்கமான சட்டப் போராளிகள் தளம் வாயிலாகவும், மக்கள் நல பாதுகாப்பு கழகம் மூலமாகவும் 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும், மின்சார வாரியத்தினருக்கும் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக முறையாக, மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடும் செய்யப்பட்டது. இது சம்பந்தமான செய்திகளை புகைப்பட ஆதாரங்களுடன் நாம் கீழை நியூஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

கீழக்கரை நகரில் எலும்புக் கூடாய் காட்சியளிக்கும் அபாய மின் கம்பங்கள் – உடனடி நடவடிக்கை கோரி ‘சட்டப் போராளிகள்’ மனு

இந்நிலையில் கடந்த வாரம் கீழக்கரை மின்சார வாரியத்தினரால் சம்பந்தப்பட்ட அபாய மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் நிறுவப்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

1 Comment

  1. இந்த சிறந்த சமூக சேவை எந்த அரசியல் லாபமும் இல்லாமல் செயல்படுவது எண்ணி மகிழ்ச்சி

Comments are closed.