துபாயில் முறையில்லாமல் வாகனம் ஒட்டும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள்…

ச்சரிக்கை இல்லாமல் வரிசையில் இருந்து விலகி செல்லும் வாகன ஓட்டிகளை கண்கானிக்க புதிய கேமாராக்கள் கடந்த புதன் கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட தூர போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து கொள்ள சாலை விதியை மீற முயற்சிக்கும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காக வளைவு பகுதி, குறுக்கீட்டு சந்திப்பு மற்றும் வெளியேறும் பகுதிகளில் பெரும்பாலும் ராடர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் முகம்மது சைஃப் அல் சஃபியீன்- துபாய் துணை தலைமை காவல்துறை அதிகாரி கூறிப்பிட்டுள்ளார்.

1000 மீட்டர்கள் தூரம் வரை வரிசையில் இருந்து தாவும் வாகன ஓட்டிகளை கண்கானிக்கும் அளவுக்கு அதிநவீன சாதனம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாலையை கண்காணிக்கவும்,சாலை ஒழுக்கங்களை மீறும் வாகனங்களுக்கு அபாரதம் விதிக்கவும், கவனமற்ற ஓட்டிகளை கட்டுப்படுத்தவும் ரடார்கள் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். வாகன ஓட்டிகளின் விதி மீறல் தகவலை கேமராக்கள் உடனே செயல் மைய அதிகாரிக்கு அனுப்புகிறது அதனை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்த பிறகே அபராதம் அளிக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

சாலை ஒழுக்கம்  (Lane Discipline) தவறும் ஓட்டுனருக்கு 200 திர்ஹமும் அபராதமும் 4 கரும் புள்ளிகளும் விதிக்கப்படுகிறது.. கடந்த வருடம் மட்டும் சாலை விதியை மீறியவர்களுக்கு 230,996 அபராதங்கள் காவல் துறை வழங்கியிருக்கிறது.அதன் விளைவாக நடந்த 145 விபத்துகளால் 7 நபர்கள் மரணித்துள்ளார்கள், 78 காயமடைந்துள்ளனர்.

ஆகையினால், வெளியேறும் பகுதி மற்றும் குறுக்கீட்டு சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க துபாய் போலீசின் 2020 திட்டத்தின் ஒரு பகுதியான சாலை விபத்துகளால் நிகழும் மரணங்களை பூஜ்யமாக்கவும் புதிய வகை கேமரக்கள் உதவியாக இருக்கும் என்று மேஜர் ஜெனரல் முகம்மது அல் சஃபியீன் கூறினார்.

துபாய் நகரம் சாலை பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி விபத்துகள் இல்லா நகரமாக்க முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சாலை விதிகளை பேணுவோம்.. உயிர்களை காப்போம்…