Home செய்திகள் மண்டபம் முகாமில் பசுக்கள் மர்மச்சாவு?

மண்டபம் முகாமில் பசுக்கள் மர்மச்சாவு?

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் முனைக்காடு வண்ணாந்தரவை பில் மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதில் முனைக்காடு பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் கறவை பசுக்கள் இரை தேடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை இரை தேடிச் சென்ற கறவை பசுக்கள் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பசுக்களின் உரிமையாளர்கள் தேடிச் சென்ற போது பசுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வழி நெடுக மர்மமான முறையில் இறந்து கிடந்தன. முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், நாகலட்சுமி, முத்துச்சாமி, சண்முகவேல், பெரியகருப்பன், ராணி, பாகம்பிரியாள் ஆகியோரது பசுக்கள் இறந்த தாக தெரிய வந்தது. பசு ஒன்றின் மதிபபு ரூ.50 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது .

பசுக்களின் உரிமையாளர்கள் புகார் அடிம்படையில் பிரேத பரிசோதனை செய்ய கால்நடை துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பால்ராஜ் என்பவர் கூறுகையில், குப்பை கழிவுகளில் கிடந்த குருணை மருந்து தின்று வாயில் நுரை தள்ளிய நிலையில் பசுக்கள் இறந்துள்ளன என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!