இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் மாவட்ட கிளை, யூத் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி, கீழ்க்கரை ரோட்டரி சங்கம், தாலுகா ரெட் கிராஸ் கிளை மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆகியோர் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி. யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் ஆனந்த் வரவேற்றார்.
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து துவங்கிய இப்பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் ராஜூபுதீன் தலைமையில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் எஸ். சுந்தரம், மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் ஏ. வள்ளி விநாயகம் ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடற்கரை வரை யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதனை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளுடன் கோஷமிட்டுச் சென்றனர்.
உடற்கல்வி இயக்குனர் முனைவர் தவசிலிங்கம் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், கீழ்க்கரை ரோட்டரி சங்கம் மற்றும் ரெட் கிராஸ் நிர்வாகிகள் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி, T.முனியசங்கர், அல்நூர் ஹசன், ஆசாத் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
பேரணிக்கான ஏற்பாடுகளை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி மற்றும் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.