கீழக்கரை நகரில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஆங்காங்கே சமூக மற்றும் சமுதாய இயக்கத்தினர் கோடை கால கால் நீர் மோர் பந்தல் அமைத்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் இன்று (15.04.2018) காலை 10:30 மணியளவில் வள்ளால் சீதக்காதி சாலையில் யூஸுஃப் சுலைஹா மருத்துவமனை அருகில் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் பந்தலை பிரபுக்கள் தெருவை சேர்ந்த சகோதரர் செய்யது அஹமது அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை அறக்கட்டளையின் துணை தலைவர் அஹமது சுஹைல், செயலாளர் முஹைதீன் அடுமை, துணை செயலாளர் அய்யூப் கான் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
அறக்கட்டளையின் ஆலோசகர்கள் சகோதரர் சீனி இப்ராஹீம் மற்றும் சகோதரர் முஹம்மது அன்ஸாரிப்பு ஆகியோர் உடனிருந்தனர். தெருவாசிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.