
கீழை மரச் செக்கு எண்ணெய் நிறுவனத்தின் மற்றுமொரு ஆரோக்கியத்தின் வாசலாக ‘கீழை’ இயற்கை அங்காடி நேற்று (18.05.2018) கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் திறக்கப்பட்டு உள்ளது. சட்டப் போராளிகள். நூருல் ஜமான் மற்றும் ஜெமீல் முஹம்மது ஒன்றிணைந்து உருவாக்கி இருக்கும் இந்த இயற்கை அங்காடியில் நூறு சதவீதம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவு வகைகளும், எந்த ஒரு வேதி பொருள்களும் கலக்கப்படாத இயற்கை உணவு பொருள்களும், நாட்டு மருந்து வகைகளும், இனிப்பு கார வகைகளும் கிடைக்கிறது.
கலப்படமற்ற இயற்கை உணவு வகைகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் இந்த இயற்கை அங்காடியில் முதன்மை நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு வரும் கீழை மரச் செக்கு எண்ணெய்க்கு உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வளைகுடா வாழ் கீழக்கரை சொந்தங்களும் பெரும் வரவேற்பை அளித்து வரும் நிலையில் தற்போது திறக்கப்பட்டு இருக்கும் கீழை இயற்கை அங்காடிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த இயற்கை அங்காடியில் நாட்டு சர்க்கரை, இந்து உப்பு, ஊறுகாய் வகைகள், சிறுதானிய வகைகள், கருப்பட்டி, பனங் கற்கண்டு, பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய பிஸ்கெட் வகைகள், சீயக்காய், சோப்பு உள்ளிட்ட இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருள்களும் கிடைக்கிறது.
மேலும் கீழை மரச் செக்கின் சிறப்பு தயாரிப்புகளான மரச் செக்கு எண்ணெய், நெய், தேன் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் கலப்படம் இருப்பதாக நிரூபித்தால், ‘தங்க காசுகள்’ பரிசளிக்கப்படுவதாக பொதுமக்களுக்கு கீழை மரச் செக்கு நிறுவனத்தினர் சவால் விடுத்துள்ளது பொதுமக்களை இயற்கை அங்காடியின் பக்கம் சுண்டி இழுத்துள்ளது.
கீழை இயற்கை அங்காடியின் தொழில் சிறக்க கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
You must be logged in to post a comment.