“பெண்கள்” மறைக்கப்பட்ட பலம், ஆம்- ஏனென்றால், “பெண்கள்” என்ற வார்த்தையை கேட்கும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது? பெண் என்பவள், ஆண் வர்க்கத்தின் பார்வையில் ஒரு தரம் குறைந்தவளாகவே பார்க்கப்படுகிறாள். இந்த அடிமைத்தனமான எண்ணமே பல யுகங்களாக மேலோங்கி நிற்கிறது என்பது நிதர்சனம்.
ஏன் இந்த உலகம் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பிணைந்துள்ளது? ஏன் பெண்கள் தங்கள் அதிகாரங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் ? இந்த கண்ணோட்டம் மாற, மனித குலத்திற்கு கிடைத்த பொக்கிஷமே பெண்கள்தான் என்பதை இந்த சமுதாயம் உணர வேண்டும். இந்த பெண் இனம் படைக்கப்படாமல் இருந்தால், மனிதகுலம் இல்லை என்பதை உணர வேண்டும்.
பெண்களின் பலமும், திறமையுமே இவ்வுலகை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை என்பதை இச்சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும். ஏன் ஆண், பெண் என்ற பாகுபாடு சமுதாயத்தில் நிலவுகிறது?. இந்த ஆண், பெண் இருவரும் மனித இனம்தானே?? ஒரு ஆணுக்கு கல்வியிலும், பொறுப்புகளிலும் முன்னுரிமை அளிக்கப்படும் பொழுது, பெண்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது?. ஏன் பெண்களின் ஆசைகள் கனவாகவே மரித்து விடுகிறது?. ஏன் பெண்கள் ஆண்கள் போலவே செயல்பட முடியாது?. ஏன் பெண்களுக்கும் இந்த சமுதாயம் வாய்ப்பு வழங்கக்கூடாது?. பெண்களுக்கு வாய்ப்பளித்தால் உலகம் இருண்டு விடுமா?? நிச்சயமாக இல்லை, இந்த உலகம் பிரகாசிக்கும், ஆணுக்கு இணையாக பெண்களும் சமுதாயத்தில் வளர்ந்து நிற்பார்கள் என்பது உறுதி.
பெண்கள் மீது விரும்பாத காரியங்கள் திணிக்கப்பட்டாலும், அதிலிருந்து மீண்டு, அதையும் வெற்றியாக மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் இந்த பெண்ணினம். அந்த பலம் கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய கனவுகளை நினைவாக்கும் விதமாக வாய்ப்புகள் கொடுத்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சாதனைகள் புரிவார்கள். இதற்கு முதலில் பெண்கள் பற்றிய நம்மிடம் உள்ள தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்.
இறுதியாக, “ஒரு பெண்ணின் கனவு, அது கனவாக இருக்கக்கூடாது, அது நினைவாக்கப்பட வேண்டும்”. அது உண்மையாகும் பட்சத்தில் மறைந்த சக்தியிலிருந்து அறியப்படாத சக்திக்கு மாறுவதற்கான வாய்ப்பாக அமையும்.
ரியாதில் இருந்து – ஹஸ்மத் ஆயிஷா
2 comments
நல்ல சிந்தனை ! இந்தக் கனவை நனவாக்க தாய்மார்களும் தன் ஆண் மக்களுக்கு சம உரிமைச் சிந்தனைகளை சிறு வயது முதல் செயல்படுத்தி வளர்க்க வேண்டும் !
வளரட்டும் உனது எழுத்தாக்கம் !
– சாலையூர் சாதிக்
இந்தப் பெண்ணினம் படைக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த மனிதகுலமே இல்லை என்பதை உணரவேண்டும்”
“ஒரு பெண்ணின் கனவு அது கனவாக மட்டுமே இருக்கக்கூடாது, மாறாக அது நினைவாக்கப்பட வேண்டும்” அருமையான எழுச்சிமிகு வரிகள்… மாஷா அல்லாஹ்
Comments are closed.