
ரமலான் மாதம் தொடங்கியதை ஒட்டி சவுதி அரேபியா ஜித்தா நகரில் கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்கள் முதல் நோன்பு அன்று (18/05/2018) இஃப்தார் நிகழ்சிக்காக ஒன்று கூடினர். இந்த இஃப்தார் நிகழ்வு ஆர்யாஸ் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்யாஸ் உணவகத்தின் நிர்வாகி சீனி அலி செய்திருந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்கள் கூறியதாவது, “சவுதி அரேபியாவை பொறுத்தவரை நம் ஊர் சகோதரர்கள் பல இடங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் வேலை பார்த்து வருகிறார்கள், ஜித்தா நகரில் பல சகோதரர்கள் வேலை பார்த்து வந்தாலும்,அடிக்கடி சந்தித்து கொள்வது மிகவும் கடினமான விசயம். இது போன்ற சம்பவங்களில் சந்தித்து கொள்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
You must be logged in to post a comment.