
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம், சென்னை சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் இன்று (30.03.2018) மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவி தொகை, முதியோர், வேலையில்லா பட்டதாரிகளுக்கான ஊக்கத் தொகை உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி அமீர்கான் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கீழக்கரை பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கீழக்கரை நகர் நிர்வாகிகள் நதீர் சாகுல் ஹமீது, ஹமீது பைசல், சிராஜுதீன், ஜுபைர், காதர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறுபாண்மையினருக்கு கிடைத்து வரும் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.
You must be logged in to post a comment.