முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் 83வது பிறந்த நாள் விழா..

இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் 83வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க நகர் கழகம் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாட்பட்டது.

இந்த விழாவில் 83 கிலோ கேக்கை தொண்டர்கள் மத்தியில் சுப.தங்கவேலன் வெட்டி அனைவருக்கும் கொடுத்தார்.

இந்நிகழ்வில் முக்கியஸ்தர்கள் உடன் நகர் செயலாளர் கார்மேகம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், தொழில் அதிபர் மனோகரன், அகமது தம்பி, 22 வது வார்டு செயலாளர் அகஸ்டின் திரவியம், ஓய்வு பெற்ற டி.ஆர் ஒ குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.